தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
பதிவு : ஜனவரி 20, 2021, 01:46 PM
தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 ஆக உள்ளது. இவர்களில் ஆண்கள் 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 473 ஆக உள்ளனர். பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 ஆகும். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7 ஆயிரத்து 246 ஆக உள்ளனர். சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில், அதிக வாக்காளர்கள் உள்ளதாகவும் அதன் எண்ணிக்கை மொத்தம் 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 என கூறப்பட்டுள்ளது. அதே சமயம் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதி உள்ளது. இதில் வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 272 ஆக உள்ளது. 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்கள், எண்ணிக்கை மொத்தம் 8 லட்சத்து 97 ஆயிரத்து694 என்றும்,  இவர்களில் ஆண்கள் 4 லட்சத்து 80 ஆயிரத்து 953 என்றும், பெண்கள் 4 லட்சத்து 16 ஆயிரத்து 423 என்றும், மூன்றாம் பாலினம் 318 என்றும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், 2021 ஜனவரி முதல் தேதியில் 18 வயது நிறைவடைந்தவர்கள், தங்களது பெயரை தேர்தல் ஆணைய இணையதள பக்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்றும், தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.