8 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள் - கின்னஸ் சாதனை செய்து அசத்தல்

தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுழற்றி, சாதனை படைத்துள்ளனர் இந்த மாணவர்கள்...இதுகுறித்த அதிரடி ஆட்டத்தை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...
8 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவர்கள் - கின்னஸ் சாதனை செய்து அசத்தல்
x
தொன்று தொட்ட காலம் முதலே தமிழர்களின் ரத்தத்தில் கலந்தது வீர விளையாட்டு.இவற்றை, இந்த தலைமுறை குழந்தைகளுக்கும் கற்றுத் தரும் பணியில் மும்முரம் காட்டுகின்றனர்.இந்த பயிற்சி கழகத்துக்கு வழிகாட்டுகிறார் 107 வயது முதியவர்....வைகை ஆற்றுக்குள் காலை முதலே தொடங்கும் வீர விதை சிலம்பாட்ட கழகத்தின் பயிற்சியில் சிறுவர் - சிறுமியர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பயிற்சி பெற்று வருகின்றனர்.இங்கு சிலம்பம், சுருள் வாள் உள்ளிட்ட பல்வேறு வீர விளையாட்டுகளை ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.இவர்களில் பலர் தேசிய, மற்றும் உலக அளவில் பல சாதனை படைத்துள்ளனர். தற்போது இவர்கள் 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்னர்.இவ்வளவு சாதனைகள் செய்தும் பயிற்சி பெற சரியான மைதானம் இல்லாமல் ஆற்றில் பயிற்சி எடுத்து வருவது வேதனை அளிக்கிறது என்கிறார் சிலம்ப பயிற்சியாளர் பெருமாள்.60, 70 வயதிலேயே நடக்க கூட முடியாமல்  பலரும் தள்ளாடும் இந்த காலத்தில், 107 வயதிலும் சிலம்பம் சுற்றி அசத்துகிறார் சிலம்ப ஆசிரியர் சீனிவாசன்.சிலம்பம் ஒருவரது உடலை எவ்வளவு ஆரோக்கியமாக வைத்திருக்கும் என்பதற்கு எடுத்துக்காடாக இருக்கும் இவர், இதுவரை 100க்கும் மேற்பட்டோருக்கு வீர விளையாட்டுகளை கற்றுத் தந்து, அரசு மற்றும் வெளிநாடுகளில் வேலை பெற்று தந்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.சிலம்ப பயிற்சி தங்களை பாலியல் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பது மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது என்கிறார்  மாணவி அபிநயா.



Next Story

மேலும் செய்திகள்