கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு தயாராகும் தமிழகம்

கொரோனா தடுப்பூசி திட்டத்திற்காக, தமிழகம் முழுவதும் 45 சுகாதார மாவட்டங்களுக்கு 28 லட்சம் ஊசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
x
நாடு முழுவதும் வரும் 16ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதற்காக, மத்திய அரசு தொகுப்பில் இருந்து 33 லட்சம் ஊசிகள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதில் முதற்கட்டமாக 28 லட்சம் ஊசிகள் மற்றும் சிரஞ்சுகள் . 

தமிழகத்தில் உள்ள 45 சுகாதார மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சென்னை, வேலூர், கோவை, சேலம், நெல்லை, மதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர் கடலூர் என 10 முனையங்கள் வழியாக இந்த பணி நடைபெற்றுள்ளது.

அதிகபட்சமாக சென்னை மண்டலத்திற்கு 6 லட்சம் ஊசிகளும்.

கோவை மண்டலத்திற்கு 3 புள்ளி 79 லட்சம் ஊசிகளும் அனுப்ப பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்