தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு
பதிவு : நவம்பர் 02, 2020, 12:45 PM
வரும் 16 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அதற்கான முன்னேற்பாடு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகள் வரும்16 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளன. 2 வார காலமே அவகாசம் உள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்தும், அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இரு துறைகளின் அமைச்சர்களும், உயர் அதிகாரிகளுடன், இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினர். வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 

பிற செய்திகள்

மருத்துவ கலந்தாய்வு தொடர்பாக மனு தாக்கல் - 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை சேர்க்க கோரிக்கை

2020-21 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பிற்கான மருத்துவ கலந்தாய்வில் 11 புதிய அரசு மருத்துவ கல்லூரிகளை கலந்தாய்வு பட்டியலில் சேர்க்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

3 views

செல்போன் திருடர்களை விரட்டி பிடித்த காவல் உதவி ஆய்வாளர் - சிசிடிவி கேமராவில் பதிவான அதிரடி காட்சிகள்

சென்னையில் செல்போன் திருடர்களை விரட்டிப் பிடித்த காவல் உதவி ஆய்வாளரை, நிஜ ஹீரோ என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.

536 views

மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு விவகாரம் : "நீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்படவில்லை" - திமுக சார்பில் மனு தாக்கல்

ஒ.பி.சி இடஒதுக்கீடு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது திமுக சார்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

5 views

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப் பெருக்கு - ஆற்றங்கரையோரம் வெள்ளத்தில் சிக்கிய பெண் மீட்பு

குடியாத்தம் கவுண்டன்யா ஆற்றில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்ட பெண்ணை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

5 views

2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் யாருக்கு சாதகம் என்பது குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு......

எம்.ஜி.ஆர். காலம் தொட்டே தமிழக அரசியலில் முக்கிய களமாக பார்க்கப்படுகிறது திண்டுக்கல் மாவட்டம்...

36 views

தமிழகம் முதலிடம் - நன்றி தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி

உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தமிழகம் முதலிடம் வகித்து விருது பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.