அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை

2021 மே மாதத்தில் அதிமுக ஆட்சியை கோட்டையில் இருந்து மக்கள் வீட்டிற்கு அனுப்புவார்கள் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியை மக்கள் வீட்டிற்கு அனுப்புவர் - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை
x
தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில், 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு திமுக பொதுக் கூட்டம், இன்று முதல் ஈரோட்டில் தொடங்கியுள்ளது. இதனை காணொலி காட்சி மூலம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், கொரோனாவால் ஒருவர் கூட பாதிக்க விடமாட்டோம் என்று கூறிய எடப்பாடியின் ஆட்சியில், 11 ஆயிரம்  பேர் உயிரிழந்தாக கூறியுள்ளார். நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் விரோத அதிமுக ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுவது ஏற்புடையதல்ல என்று ஸ்டாலின் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்