பாஜக மாநில தலைவர் மற்றும் உள்ளூர் தலைவர்கள் 10 பேர் மீது வழக்கு

பாஜக மாநில தலைவர் முருகன் கலந்துகொண்ட மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில தலைவர் மற்றும் உள்ளூர் தலைவர்கள் 10 பேர் மீது வழக்கு
x
பாஜக மாநில தலைவர் முருகன் கலந்துகொண்ட மறியல் போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்துகொள்ள பாஜக மாநில தலைவர் முருகன் தலைமையில் பாஜகவினர் காளையார்கோவிலுக்கு சென்றனர். ஆனால், அதற்கு அனுமதி அளிக்கவில்லை என கூறி மதுரை விரகனூர் பகுதியில் பாஜக மாநில தலைவர் முருகன் உள்ளிட்ட பாஜகவினர் சாலை மறியல் செய்தனர். 
இந்நிலையில் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மகா சுசீந்திரன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக பாஜகவினர் 10 பேர் மீது மட்டும் சிலைமான் காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்