சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையான சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலையான சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்தது சிபிஐ
x
அதில், ஜூன் 19 ஆம் தேதி இரவில் தொடங்கி விடிய விடிய, 2 பேரின் அலறல் சப்தம் நிற்கவிடாமல்,  ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை காவலர்கள் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேரின் ரத்தமும் காவல் நிலைய சுவர்கள், மேஜைகள், லத்திக் கம்புகள், கழிவறைகளில் படிந்துள்ளதாகவும் சிபிஐ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சிதறிக் கிடந்த ரத்தத்தை துடைத்ததால் உடைகள் முழுவதும் ரத்தம் தோய்ந்துவிட்டது. பின்னர், மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது முதல் முறையாக உடைகளை போலீசார் மாற்றி உள்ளதாகவும், காவல் நிலையத்தில் சிதறிக்கிடந்த ஜெயராஜ் , பென்னிக்ஸின் ரத்தத் துணிகளை தூய்மைப்படுத்தி தடயங்களை மறைக்க போலீசார் முயன்றுள்ளதாகவும், சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்