மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்

திண்டுக்கல் அருகே மர்ம கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட திமுக நிர்வாகியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட திமுக நிர்வாகி - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்
x
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சின்னப்பன் என்கிற அருண். திமுக வர்த்தகர் அணியின் துணை அமைப்பாளராக இருந்த இவரை நேற்று இரவு மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. அவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனிடையே கொலையாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அருணை அந்த கும்பல் கொடூரமாக வெட்டிக் கொல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்