தமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் அதிகரிப்பு

தமிழகத்தில் கடைகள் திறப்பு நேரம் நாளை முதல் இரவு 10 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
x
இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட உத்தரவில், காய்கறி, மளிகை உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுபாட்டு பகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் இரவு 10 மணி வரை கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்கவும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
கடைகளுக்கு செல்லும் போது சமூக இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்