ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தொடர் தோல்வி - ரம்மிக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால் விபரீத முடிவு

புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், இளைஞர் ஒருவர் தீ குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.
x
புதுச்சேரியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாததால், இளைஞர் ஒருவர் தீ குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். கோர்க்காடு ஏரிகரையோரம் பாதி எறிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் உடல் கிடப்பதாக, மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.விரைந்து சென்ற போலீஸ், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைகாக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் உயிரிழந்தது, கோர்காடு கிராமத்தை சேர்ந்த 36 வயதான விஜயகுமார் என்பது தெரியவந்தது. சிம் கார்ட் மற்றும் ரீ சார்ஜ் கடை நடத்தி வரும் அவருக்கு, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஆன்லைன் ரம்மி எனப்படும் சீட்டு விளையாட்டிற்காக, அவர் அதிக அளவில் கடன் வாங்கி இருப்பது தெரியவந்தது. பந்தயத்தில் பெரும் நஷ்டம் ஏற்ப்பட்டதால், கடனை திருப்பி செலுத்த முடியாததால்,  தீ குளித்து தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவந்தது.

Next Story

மேலும் செய்திகள்