போலி மருத்துவ சான்றிதழ் மோசடி - பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட 3 பேர் சிக்கினர்

எம்.எஸ்.சி. சைக்காலஜி படித்து விட்டு பல வருடங்களாக டாக்டர் என கூறி மருத்துவம் பார்த்த போலி டாக்டர் உட்பட 3 பேர் போலி மருத்துவ சான்றிதழை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலி மருத்துவ சான்றிதழ் மோசடி - பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட 3 பேர் சிக்கினர்
x
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்துள்ள விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டி. 41 வயதான இவர் கரூரில் டாக்டர் என கூறி மருத்துவம் பார்த்து வந்ததோடு சொந்தமாக கிளினிக் ஒன்றையும் நடத்தி வந்தார். மெடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்வதற்காக இவர் வந்த போது தான் அவருடைய ஆவணங்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதையடுத்து இவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை வந்த ஜெயபாண்டியை போலீசார் கைது செய்து விசாரித்த போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. ஜெயபாண்டியுடன் சேர்ந்து கொண்டு திருச்சியை சேர்ந்த மருத்துவரும்,  அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ போராசிரியர் என  3 பேரும் இந்த பலே  மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஒரு சான்றிதழுக்காக சுமார் 25 லட்ச ரூபாய் வரை பணம் பெற்றதும் தெரியவந்ததை தொடர்ந்து விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்