டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார் குஷ்பு - விமான நிலையத்தில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு

டெல்லியில் இருந்து நடிகை குஷ்பு சென்னை திரும்பினார்.
x
டெல்லியில் இருந்து நடிகை குஷ்பு சென்னை திரும்பினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, நேற்று பாஜகவில் இணைந்தார் குஷ்பு. இந்த நிகழ்விற்காக அவர் டெல்லி சென்றிருந்தார். அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், குஷ்பு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், டெல்லியில் இருந்து இன்று அவர் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்