"மெரினாகடற்கரையில் மக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும்"

மெரினாகடற்கரையில் மக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்கும் என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
x
சென்னை மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, கடற்கரையை சுத்தப்படுத்துவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான சென்னை மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர், மெரினா கடற்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு மக்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும் என்றும் தெரிவித்தார். தமிழக கடற்கரைகளை அழகுபடுத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை கேட்டறிந்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையருக்கும், காவல் ஆணையருக்கும் அறிவுறுத்தினர். மேலும்,லூப் சாலையில் மீன் சந்தை அமைப்பது குறித்து நவம்பர் 11ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்