தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி பெற வைக்க முடியும்? - அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கேள்வி

பிஇ அரியர் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு செய்வது சரியல்ல என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
x
பொறியியல் படிப்பில் அரியர் தேர்வு மாணவர்களை தேர்ச்சி செய்யும் விவகாரத்தில், தேர்வு எழுதாமல் எப்படி தேர்ச்சி அடைய வைக்க முடியும்? என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கேள்வி எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக, அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் தனக்கு கடிதம் எழுதியதாகவும் அதற்கு பதில் அளித்ததாகவும் குழுவின் தலைவர் சகஸ்ரபூதே தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தில், தமிழக அரசு பொருத்தமற்ற விஷயத்தை செய்வதாகவும் தேர்வை நடத்துவது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வாகும் எனவும் சகஸ்ரபூதே தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்