தேசியக் கொடி அவமதிப்பு - எஸ்.வி.சேகரின் உத்தரவாத மனுவை ஏற்கிறோம் என காவல்துறை தகவல்
தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசியதற்கும், முதலமைச்சர் குறித்து பேசியதற்கும் வருத்தம் தெரிவித்து எஸ்.வி சேகர் தாக்கல் செய்த மனுவை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. நிர்வாகி எஸ்.வி சேகர், தேசியக் கொடி குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதற்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து, எஸ்.வி சேகர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்பதாக தமிழக காவல்துறை சார்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எஸ்.வி. சேகரை கைது செய்வதற்கான தடையை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
Next Story