குடிமராமத்து பணிகளை இணையதளத்தில் வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் மேற்கோள்ளப்படும் குடிமராமத்து பணிகளை மக்களுக்கு தெரியும்படி இணையதளத்தில் வெளியிடவும், பணியின் போது கரைகளில் மரக்கன்றுகள் நடவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
குடிமராமத்து பணிகளை இணையதளத்தில் வெளியிட மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு
x
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பல்வேறு கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் ஒதுக்கீடு செய்ததை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரதை சேர்ந்த போஸ் மற்றும் பலர் தாக்கல் செய்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு, நீதிபதி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன் படி, கால்வாய்கள் அடையாளம் காணும் பணியில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் ஈடுபடவேண்டும், விபரங்களை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் வெப்சைட்டில் வெளியிட வேண்டும். கருத்துக்கள் கூற உரிய வசதி ஏற்படுத்த வேண்டும், இனி வரும் காலங்களில் விவசாய சங்கங்களின் மூலம் குடி மராமத்து பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்வதற்கு முன்னதாக அனைத்து விபரங்களையும் வெளியிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்