திருவண்ணாமலையில் வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு குறித்து முதலமைச்சர் ஆலோசனை
திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
திருவண்ணாமலை மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த்தடுப்பு குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார். மாநிலத்தில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு நடப்பாண்டு அதிக நெல் விளைச்சல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர், சுமார் 6 லட்சம் ஏக்கருக்கு மேல் கூடுதலாக வேளாண் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். மேலும் முதலமைச்சர் சிறப்பு குறைதீர் திட்டம் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 35 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜவ்வாதுமலையில் தனி வருவாய் கோட்டம் உருவாக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
Next Story