இறந்த பின் கண் தானம் செய்வதில் தமிழகம் முதலிடம்

கண்தானம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இந்த பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இறந்த பின் கண் தானம் செய்வதில் தமிழகம் முதலிடம்
x
தமிழகத்தில் கடந்த  நான்கு ஆண்டுகளில் மட்டும்  43 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளனர்.

இந்த வகையில், அதிக அளவில் கண்தானம் செய்தவர்களின் பட்டியலில் நாட்டில், தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

தமிழகத்தில் 65 லட்சம் பேர் கருவிழி பாதிப்பால் பார்வை இழந்துள்ளனர். இதில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள். 

இந்நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 8 வரை கண்தான விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. 

இறந்தவரின் கண்களை அப்படியே மற்றவர்களுக்கு பொருத்த முடியாது. கண்ணிலுள்ள கருவிழியை மட்டும் எடுத்து பார்வை இழந்தவர்களுக்கு பொருத்தப்படும். 

இந்நிலையில் பொதுமக்கள் இணையதளம் மூலம் கண்தானம் அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு  துவக்கியுள்ளது.
 
கடந்த 2016 முதல் 2020 மார்ச் வரை தமிழகத்தில் 43 ஆயிரத்து 391 பேர் கண்தானம் செய்துள்ளனர். தமிழகத்திற்கு  அடுத்தபடியாக தெலங்கானாவில் 33 ஆயிரத்து 248 பேரும், குஜராத் மாநிலத்தில் 30 ஆயிரத்து 105 பேர் கண்தானம் செய்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்