தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
x
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், கன்னியாகுமரி  மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் என தெரிவித்துள்ளது.  புதுச்சேரி மற்றும் காரைக்காலில், லேசான மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சியில், ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய, கன மழையும் பெய்யும் என்றும்,வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்