5 மாநிலங்களில் 62 சதவீத கொரோனா பாதிப்பு - உயிரிழப்பு அதிகமுள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழகம்

நாட்டிலுள்ள மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் 62 சதவீத பாதிப்பு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
x
நாட்டிலுள்ள மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் மட்டும் 62 சதவீத பாதிப்பு உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்தார். மேலும், கொரோனா உயிரிழப்பு அதிகம் இருக்கக்கூடிய மாநிலங்களில் 70% ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிராவில் உள்ளதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்