கருப்பராயன் கோவிலில் திருட்டு முயற்சி - திருடர்களை கையும் களவுமாக பிடித்த ஊர்மக்கள்

ஈரோடு மாவட்டம் பவானி அருகே நசியனூரில் கருப்பராயன் கோவில் உள்ளது.
கருப்பராயன் கோவிலில் திருட்டு முயற்சி - திருடர்களை கையும் களவுமாக பிடித்த ஊர்மக்கள்
x
ஈரோடு மாவட்டம் பவானி அருகே நசியனூரில் கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் இரவு நேரத்தில் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைக்க முயன்றனர். அப்போது சத்தம் கேட்டு ஊர்மக்கள் கோவில் முன் திரண்டனர். பின்னர் தப்ப முயன்ற திருடர்களை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர், விசாரணையில் அவர்கள் சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த ராஜகோபால், சந்திரசேகர்,கார்த்திகேயன் என்பது தெரியவந்தது , இதனையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்