கமல்ஹாசன் பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு - கவிஞர் வைரமுத்து

பிறப்பு சிவப்பாக இருந்தாலும், இருப்பு கறுப்பு என நடிகர் கமல்ஹாசன் குறித்து கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் பிறப்பு சிவப்பு; இருப்பு கறுப்பு -  கவிஞர் வைரமுத்து
x
பிறப்பு சிவப்பாக இருந்தாலும்,  இருப்பு கறுப்பு என நடிகர் கமல்ஹாசன் குறித்து கவிஞர் வைரமுத்து பாராட்டு தெரிவித்துள்ளார். திரையுலகில் கமல் ஹாசன் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி வைரமுத்து விடுத்துள்ள   டுவிட்டர் பதிவில், பரமக்குடியின் அருமைக் கலைஞன் என்றும், மரபு கடந்த புதுக்கவிதை அதை புரிதல் கடிது என்றும் புரிந்தால், இனிது என்றும் புகழாரம் சூட்டியுள்ளார். அறுபது ஆண்டுகள் காய்த்த பின்னும், நனிகனி குலுங்கும் தனி விருட்சம் கமல்ஹாசன் என்று கூறியுள்ள வைரமுத்து, கலைத்தாய் தன் நெற்றியில் மாற்றி மாற்றிச் சூடுவது திலகத்தையும் இவர் பெயரையும்தான் என்றும், 'கலையாக் கலையே கமல்' என்றும் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்