இன்று - நடிகை ஸ்ரீதேவி பிறந்த நாள் - தேசம் கடந்து சிறகை விரித்துப் பறந்த 'மயில்'

தமிழகத்தில் பிறந்து இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்த, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாள் இன்று.
இன்று - நடிகை ஸ்ரீதேவி பிறந்த நாள் - தேசம் கடந்து சிறகை விரித்துப் பறந்த மயில்
x
தமிழகத்தில் பிறந்து இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்த, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் பிறந்த நாள் இன்று. ரசிகர்களின் நெஞ்சங்களில்  நீங்கா இடம்பிடித்த, ஸ்ரீதேவியின் திரையுலக பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்.

இந்தியத் திரையுலகம் எத்தனையோ கனவு தேவதைகளைக் கண்டிருக்கிறது. அவர்களுள், தமிழகத்தின் சிவகாசி அருகேயுள்ள சாதாரண கிராமத்தில் பிறந்து, இந்திய திரையுலகையே தன்வசப்படுத்தியவர், ஸ்ரீதேவி.

1967 ல் வெளியான கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார், ஸ்ரீதேவி.

1971-ல் மலையாளத்தில் வெளியான 'பூம்பட்டா' என்ற படத்தில், சிறப்பாக நடித்து 8 வயதிலேயே, சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான கேரள அரசின் விருதை வென்றார்.

அதன்பிறகு இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர்தான், தமிழில், மூன்று முடிச்சு படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகியாக அறிமுப்படுத்தினார்.

இந்தப் படத்தில் கமல், ரஜினியுடன் தொடங்கிய பயணம்... 16 வயதினிலேவில் மயிலாக பாரதிராஜாவால் உச்சம் பெற்று தமிழ் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டார்.

அதன்பின்னர், பாலசந்தர், பாரதிராஜா, பாலுமகேந்திரா, மகேந்திரன் போன்ற பெரிய இயக்குனர்களின் தேர்வாக மாறினார் ஸ்ரீதேவி.

1980 களில், காதல் இளவரசன் என வர்ணிக்கப்பட்ட கமலுக்கு பொருத்தமான ஜோடி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.

சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிவப்பு, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், குரு போன்ற பல படங்கள் ஸ்ரீதேவியின் திரையுலக வாழ்வை உச்சத்திற்கு கொண்டுசென்றன.

பாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்தில், குழந்தைப் பண்புகளைக் கொண்ட குமரிப்பெண்ணாக நடிப்பின் உச்சம் தொட்டார், ஸ்ரீதேவி.

அழகு மட்டுமன்றி, அழகுடன் கூடிய மிகைப்படுத்தப்படாத இயல்பான நடிப்புதான், ஸ்ரீதேவிக்கு பல ஆண்டுகாலம், திரைப்பிரவேசத்தை வசமாக்கியது.

நட்சத்திர கதாநாயகர்களுக்கு இணையாக, தமிழ் சினிமாவில், அந்நாட்களிலேயே, தனக்கென ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்தார். அந்தளவிற்கு பிரபலமானவராக, இருந்தவர்.

1980 களில், ஸ்ரீதேவி சிறந்த நடிகையென்று அனைவராலும் பாராட்டப்பட்டதுடன், கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற அந்தஸ்தையும் பெற்றார்.

தென்னிந்திய மொழிகளைக் கடந்து, இந்தி திரையுலகிலும் தடம் பதித்தார் ஸ்ரீதேவி.

திரைப்பட தயாரிப்பாளருமான, போனி கபூருக்கும், ஸ்ரீதேவிக்கும் 1996 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்குப் பின்னர், சினிமாவைவிட்டு விலகியிருந்த ஸ்ரீதேவி, 15 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலீஷ் விங்கிலிஷ் திரைப்படத்தின் மூலம் மீண்டும் வசீகரம் குறையாத தோற்றத்துடன் தோன்றி நடித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, விஜயின் புலி திரைப்படத்தில், நடித்தார்.

இந்தியில் வெளியான, மாம் படம் ஸ்ரீதேவியின் 300 வது படம்.

54 வயதிலும், இளமை குறையாமல் அழகில் மின்னினார் ஸ்ரீதேவி. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிபடுத்திய ஸ்ரீதேவிக்கு, 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

தனது உறவினர் இல்ல திருமண விழாவுக்காக துபாய் சென்றிருந்த ஸ்ரீதேவி, குளியலறை தொட்டிக்குள் நிலைதடுமாறி விழுந்து, மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் சிவகாசி அருகே உள்ள கிராமத்தில் பிறந்த மயில், தேசம் கடந்து திரையுலகில், தன்னுடைய சிறகை விரித்துப் பறந்தது. தமிழ் நடிகைகள் வேறு எவருக்கும் கிடைக்காத இந்த கவுரவம் ஸ்ரீதேவிக்கு கிடைத்தது.

Next Story

மேலும் செய்திகள்