கொரோனாவில் உயிரிழந்த உணவக தொழிலாளி - இரு குழந்தைகளுடன் நிர்கதியாக தவிக்கும் மனைவி

கரூரில் கொரோனாவால் கணவர் உயிரிழந்த நிலையில், இரு குழந்தைகளுடன் நிர்கதியாகி உள்ள மனைவி, அரசு தனக்கு உதவிடுமாறு கோரியுள்ளார்.
கொரோனாவில் உயிரிழந்த உணவக தொழிலாளி - இரு குழந்தைகளுடன் நிர்கதியாக தவிக்கும் மனைவி
x
கரூர் வெண்ணைமலை பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் ஒருவர், வாழ்வாதாரத்துக்காக சென்னை புறப்பட்டுள்ளார். விழுப்புரம் வரை வந்த அவர், உடல்நலம் ஒத்துழைக்காத நிலையில், கரூர் திரும்பி, அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு, கொரோனா உறுதியான நிலையில், சிகிச்சை பெற்றுவந்த அவர், உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து, வீட்டில் இருந்து அவரது தயாரும் கொரோனாவில் உயிரிழந்துள்ளார். சென்னையில் உணவகத்தில் பணியாற்றிய அவர் உயிரிழந்த நிலையில், அவரது பட்டதாரி மனைவி, 12ஆம் வகுப்பு படிக்கும் மகள், 8ஆம் வகுப்பு மகன ஆகியோர் வருவாய் இன்றி நிர்கதியாக தவித்து வருகின்றனர். வாடகை வீட்டில் வசித்து வருவதாக கண்ணீர் வடிக்கும் அவர்கள், அரசு உதவி செய்ய வேண்டும் என்றும், தனக்கு அரசுப் பணி வேண்டும் என்றும் மனைவி இந்திரா கோரியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்