"குட்கா பொருட்களை சட்டசபைக்கு எடுத்துச் சென்றது ஏன்?" - சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக தரப்பு வாதம்

குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு குட்கா எடுத்துச் செல்லப்பட்டது என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
x
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டமன்றத்துக்கு எடுத்து வந்தது தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. ஸ்டாலின் உள்ளிட்டோர் தரப்பில் ஆஜராக வழக்கறிஞர்கள், குட்கா எளிதில் கிடைப்பதை அரசின் கவனத்துக்கு கொண்டு வரவே சட்டமன்றத்துக்கு குட்கா பொருட்களை எடுத்துச் சென்றதாகவும், சபாநாயகருக்கு எந்த அவமதிப்பும் செய்யவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கின் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
---


Next Story

மேலும் செய்திகள்