கந்துவட்டி கொடுமை - தம்பதி தீக்குளிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு

தூத்துக்குடியில் கந்துவட்டி கொடுமை காரணமாக குறிசொல்லும் தம்பதியர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கந்துவட்டி கொடுமை - தம்பதி தீக்குளிக்க முயற்சி - ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு
x
தூத்துக்குடியில் கந்துவட்டி கொடுமை காரணமாக குறிசொல்லும் தம்பதியர் குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் தற்போது அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஏரல் அருகே உள்ள சூழவாய்க்கால் பகுதியை சேர்ந்த கணேசன் - வேளாங்கணி தம்பதி, அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரிடம் நான்கு வருடங்களுக்கு முன்பாக மூன்று லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்திய நிலையில், இன்னும் பணம் தர வேண்டும் என்று கூறி ஜோசப் அவர்களை வற்புறுத்தி வந்து தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்