மதுரையில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.
மதுரையில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி, மேலும் 110 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பானது, 12 ஆயிரத்து 8 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 282 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். தற்போது, ஆயிரத்து 627 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 500ஐ நெருங்கி உள்ளது. புதிதாக 140 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்து 490 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 6 ஆயிரத்து 328 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ள நிலையில், 88 பேர் கொரோனா நோயால் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்