சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலி

சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
x
சென்னையில் மேலும் 13 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். நேற்றிரவு முதல் இன்று காலை வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் 10 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 6 பேர், கீழ்ப்பாக்கத்தில் 2 பேர், ஓமந்தூரார் மற்றும் ஸ்டான்லி மருத்துமனைகளில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதேபோல், வடபழனி , ஆயிரம் விளக்கு , அடையார் ஆகிய பகுதிகளில் இயங்கும் தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்