வேதா நிலையம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
x
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்  வேதா நிலையத்தை,  நினைவு இல்லமாக மாற்றும் அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், வீட்டில் உள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்தவும் எதிர்ப்பு தெரிவித்து தீபா தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் மீண்டும்  விசாரணைக்கு வந்தது. அப்போது, இழப்பீடு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்க வருவாய் கோட்டாட்சியருக்கு அதிகாரமில்லை எனவும், வேதா நிலையத்தில் உள்ள அசையும் சொத்துக்களை கையகப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும் தீபா தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எங்கிருந்தீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். தீபா தொடர்ந்த இந்த வழக்கை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றவும் பரிந்துரைத்து நீதிபதி உத்தரவிட்டார். ஏற்கனவே, வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து தீபக் தொடர்ந்த வழக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்