"காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை"- நவம்பரில் பள்ளிகள் திறப்பு என்றும் தகவல்

தமிழகத்தில், நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்புள்ளதாக, கல்வித்துறை வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
x

Article-nline-D
இந்தாண்டு தொடக்கத்தில் கொரோனா தொற்று பரவல் தொடங்கிய நிலையில், 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை முழு ஆண்டுத் தேர்வு எழுதாமலேயே அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. வழக்கம் போல் ஜூன் மாத முதல் வாரத்தில், பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், இந்தாண்டு இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் என்று, கல்வித்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும், இந்தாண்டு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் இல்லை என்றும், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஜூன் மாதம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.  

Next Story

மேலும் செய்திகள்