ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா - தன்னைத் தானே தனிமைப்படுத்திய ஆளுநர்

தமிழக ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
x
தமிழக ஆளுநர் மாளிகையில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது. 38 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, மருத்துவரின் அறிவுரைப்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். தற்போது, ஆளுநர் முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், 7 நாட்கள் அவரை தனிமையில் இருக்க அறிவுறுத்தி உள்ளதாகவும்,  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்