"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா"

தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
x
தமிழகத்தில் மேலும் 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 61 ஆயிரத்து 342 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 77 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 723 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனாவில் இருந்து ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் மீண்டுள்ள நிலையில், தற்போது, 54 ஆயிரத்து 896 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

சென்னையில் மேலும் 1,138 பேருக்கு கொரோனா

சென்னையில் மேலும் ஆயிரத்து 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இன்று ஆயிரத்து 821 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 21 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. மொத்தம் 13 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 5 ஆயிரத்து 855 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. Next Story

மேலும் செய்திகள்