தனியார் உதவியுடன் காவலர் தேர்வை ஆன்-லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் திட்டம்

ஆன்லைன் மூலம் எஸ்.ஐ. மற்றும் காவலர் தேர்வு நடத்த தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது.
x
கொரோனா காரணமாக 2ஆம் நிலை காவலர், சிறைக் காவலர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வை தனியார் ஏஜென்சி மூலம் ஆன்லைனில் நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக  துணை ஆணையர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்கள் கருத்துக் கணிப்பு நடத்த அறிவுறுத்தி உள்ளது. ஆன்லைனில் தேர்வு வசதியாக இருக்குமா, மாறானதா எனவும், தற்போதைய முறையில் தேர்வு நடத்தலாமா என்றும் கருத்துகணிப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது. கருத்துக் கேட்பு அறிக்கையை வரும் 31ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்