"சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை"

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
x
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன்  தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவரிக்கப்பட்டது. தமிழகத்தில் ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் கட்டுப்பாடு மற்றும் தளர்வு குறித்தும் தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்