தமிழகத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் தற்போதைக்கு சாத்தியமில்லை - இந்திய தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
x
தமிழகத்தில் தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சாத்தியம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குடியாத்தம், திருவொற்றியூர் தொகுதிகளுக்கு, தற்போது இடைத் தேர்தல் நடத்தும் சூழல் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட இந்த 2 தொகுதிகளுக்கும், தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய  6 மாத கால அவகாசம், செப்டம்பர் 7ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் இந்த விளக்கத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்