நடப்பாண்டில் 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் -உணவு துறை அமைச்சர் காமராஜ் தகவல்

நடப்பாண்டில் 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டில் 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் -உணவு துறை அமைச்சர் காமராஜ் தகவல்
x
சென்னை கீழ்ப்பாக்கம், தாமரைப்பூங்கா காவலர் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களில் ஆய்வு செய்த அமைச்சர் காமராஜ் , பொதுமக்களுக்கு சத்து மாத்திரைகள், முக கவசங்கள் மற்றும் கபசுர குடிநீரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடப்பாண்டில் 28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்ததாகவும் , இதுவரை 27.50 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதன் மூலம் 4 லட்சத்து 20 ஆயிரம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்