சென்னையில் தொற்று அதிகரித்த மண்டலங்கள் - விவரம் வெளியீடு
சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 7 நாட்களில் அதிகபட்சமாக திரு.வி.க நகரில் 4 புள்ளி ஐந்து சதவீதமும், பெருங்குடியில் 3 புள்ளி 5 சதவீதமும், ஆலந்தூரில் 3 புள்ளி 3 சதவீதமும் அடையாறு மண்டலத்தில் ஒன்று புள்ளி நான்கு மண்டலம், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஒன்று புள்ளி ஒன்று சதவீதமும், மணலி மண்டலத்தில் பூஜ்யம் புள்ளி மூன்று சதவீதமும் என புதிய தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதே சமயம், மீதமுள்ள 9 மண்டலங்களில், தொற்று குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. திருவொற்றியூரில், ஆறு புள்ளி ஐந்து சதவீதமும், தண்டையார்பேட்டையில் ஐந்து புள்ளி இரண்டு சதவீதமும், வளசரவாக்கத்தில் 5 சதவீதமும் கோடம்பாக்கத்தில் 3 புள்ளி ஒன்பது சதவீதமும், தேனாம்பேட்டையில் ஒன்று புள்ளி ஒன்பது சதவீதமும், புதிய நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது
Next Story