ராணிப்பேட்டை : ஒரே நாளில் மேலும் 109 பேருக்கு தொற்று

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை : ஒரே நாளில் மேலும் 109 பேருக்கு தொற்று
x
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்து 22 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆயிரத்து 79 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 943 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் மேலும் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கை  எழுந்துள்ளது.

குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகளில் கட்டுப்பாடு : கொரோனா பரவல் காரணமாக ஆட்சியர் உத்தரவு



கொரோனா பரவல் காரணமாக குடியாத்தம், பேரணாம்பட்டு ஆகிய நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கள் முதல் இப்பகுதிகளில் உள்ள மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் உணவகங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் மருந்தகங்கள் மற்றும் பெட்ரோல் பங்க்குகளுக்கு  விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முழு ஊரடங்கு வழக்கம்போல் இருக்கும் என வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.


கொரோனா பாதிப்பு காரணமாக 3 பேர் உயிரிழப்பு - பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு



சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த மூவரும் மாரமங்கலம், ஆத்தூர், அம்மாபேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த முதியவர்கள். ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளது மாவட்ட மக்களிடம் அச்சத்தை எற்படுத்தியுள்ளது.

குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்ட துணை ஆணையர் : பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்தார்



சென்னை, திருவொற்றியூர் அருகே எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் காவல் துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். மாதவரம் காவல் சரகத்திற்கு புதிதாக காவல் துணை ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றுள்ளார். இவர், திடீரென அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குடியிருப்பில் உள்ள ஒருவர் வீட்டில் நுழைந்த அவர், வீட்டில் உள்ளவர்களிடம் நலம் விசாரித்தார். 

கொரோனாவுக்கு பலியான பெண் : நல்லடக்கம் செய்த அரசு அதிகாரிகள்



நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவரின் உடலை வருவாய் மற்றும் சுகாதாரதுறை அதிகாரிகள் நல்லடக்கம் செய்தனர். குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த 58 வயது பெண் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். அவர் உடலை பெருந்துறை பகுதியில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தட்டாங்குட்டை மயானத்தில் அடக்கம் செய்தனர்.

தூத்துக்குடியில் மேலும் 161 பேருக்கு தொற்று : பாதிப்பு எண்ணிக்கை 3,290 ஆக உயர்வு



தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை மூவாயிரத்து 290 ஆக உயர்ந்துள்ளது. இதில், ஆயிரத்து 410 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆயிரத்து 855 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 


தலைமை காவலருக்கு கொரோனா உறுதி : கருமத்தம்பட்டி காவல்நிலையம் மூடல்



கோவை, கருமத்தம்பட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலக தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் காவல் நிலையம் மூடப்பட்டது. தொற்று காரணமாக சமீபத்தில் போத்தனூர், சூலூர், துடியலூர், மதுக்கரை உள்ளிட்ட காவல்நிலையங்கள் மூடப்பட்டன. இதனையடுத்து கருமத்தம்பட்டி காவல்நிலையமும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் : வீடு வீடாகச் சென்று வழங்கல்



கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் தெரு, தெருவாக சென்று வழங்கப்பட்டது, என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும், கரூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 244 பேரில் தற்போது 72 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருவதாகவும்,  கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாமக்கல் மற்றும் திண்டுக்கல்  மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.

மார்த்தாண்டம் : காய்கறி, டாஸ்மாக் கடைகளில் குவிந்த பொதுமக்கள்



இன்று தளர்வில்லா ஊரடங்கு என்பதால், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  பல்வேறு பகுதிகளில் இறைச்சி மற்றும் டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. கருங்கல், காப்புக்காடு, மார்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இறைச்சி வாங்குவதற்காக பொதுமக்கள் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.


இறைச்சி, மீன் வாங்குவதற்காக குவிந்த பொதுமக்கள் : காற்றில் பறந்த சமூக இடைவெளி நடைமுறை



திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீன் சந்தையில் சமூக இடைவெளியை மறந்து, கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் ஒன்று கூடினர். இன்று முழு ஊரடங்குகாரணமாக அசைவ பிரியர்கள் முகக்கவசம் கூட அணியாமல் மீன் மற்றும் இறைச்சி வாங்குவதில் ஆர்வம் காட்டினர். 


ஊரடங்கால் போதிய வருமானம் இல்லாததால் விரக்தி : தனியார் விடுதி ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை



மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பணியாற்றி வந்த பெங்களூருவை  சேர்ந்த ஜிக்ருல்லா என்பவர், அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்தார். கொரோனா காரணமாக விடுதி மூடப்பட்டதால், ஜிக்ருல்லா வேலையில்லாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது, இந்த நிலையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அவர், தனது செல்போனில் தனது இறப்புக்கு யாரும் காரணமல்ல என உருக்கமான வீடியோவை  பதிவிட்டுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்