கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை ஆய்வாளருக்கு இரங்கல் கூட்டம்...

கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை ஆய்வாளருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சியில், நெல்லை மாநகர காவல் ஆணையர் தீபக்தாமோர் கலந்து கொண்டு, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
கொரோனாவால் உயிரிழந்த ஆயுதப்படை ஆய்வாளருக்கு இரங்கல் கூட்டம்...
x
நெல்லை மாநகர ஆயுதப்படை ஆய்வாளராக பணியாற்றி வந்த சாதுசிதம்பரம் என்பவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சாதுசிதம்பரம் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநகராகர காவல் ஆணையாளர் தீபக்தாமோர் கலந்து கொண்டு, மறைந்த ஆய்வாளர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்