போலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது
போலீசாருக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி - காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட போலீசார் பங்கேற்பு
x
தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு, எஸ்.பி. அலுவலகத்தில் திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. மாவட்டத்தில் பணிபுரியும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்டோரை பகுதி பகுதியாக பிரித்த எஸ்.பி. ஜெயகுமார், சுமார் 50 பேருக்கு பயிற்சி அளிக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில், பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது, சட்டத்துக்கு உட்பட்டு காவல் நிலைய பணிகளை செய்வது, புகார்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தல், கைதின் போது உச்ச நீதிமன்ற கட்டளைகளை கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்பட்டன

Next Story

மேலும் செய்திகள்