சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 18 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை மேலும் 18 பேர் பலி
x
கொரோனா - சென்னையில் மேலும் 18 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனோ தொற்றுக்கு 18 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தலா 3 பேரும் சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கடந்த 12 மணி நேரத்தில் 18 பேர் சென்னையில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 

மதுரையை மிரட்டும் கொரோனா பரவல் - ஒரே நாளில் 310 பேருக்கு தொற்று உறுதி

மதுரையில் இன்று ஒரே நாளில் மேலும் 310 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 367ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. தற்போது வரை 3 ஆயிரத்து 811 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை வரை ஆயிரத்து 160 பேர் குணமடைந்து  வீடு திரும்பியுள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பால், மதுரை மாநகர மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

நெல்லையில் ஒரே நாளில் 139 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் கொரனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1439ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் 139 ஆக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 4 நாட்களில் மட்டும் 400 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். அதிகபட்சமாக நெல்லை மாநகரப்பகுதியில் 69 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 589 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 702 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 



Next Story

மேலும் செய்திகள்