கொரோனாவை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்த மூலிகை மைசூர்பா விற்ற ஸ்வீட்ஸ் கடையின் உரிமம் ரத்து

கோவையில் மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்த ஸ்வீட் கடையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவை குணப்படுத்தலாம் என விளம்பரம் செய்த மூலிகை மைசூர்பா விற்ற ஸ்வீட்ஸ் கடையின் உரிமம் ரத்து
x
கோவை மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ஸ்வீட்ஸ் கடையை நடத்தி வந்த ஸ்ரீராம் என்பவர், மூலிகை மைசூர்பா மூலம் ஒரே நாளில் கொரோனோவை குணப்படுத்தலாம் என துண்டு பிரசுரங்கள் மூலம் விளம்பரம் செய்து வந்தார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது குறித்த தகவலின் பேரில் கடைக்கு சென்ற உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், சித்த மருத்துவத் துறையினர் மூலிகை மைசூர்பாவை சோதனை செய்தனர். அதில் முறையான அனுமதி இல்லாமல் 18 வகையான மூலிகை பொருட்களை பயன்படுத்தி மைசூர்பா தயாரித்தது தெரிய வந்தது. சொந்த விளம்பரத்திற்காக, போலியான தகவல்களை வெளியிட்டதை உறுதி செய்த அதிகாரிகள், ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான 120 கிலோ மைசூர்பா மற்றும் மூலிகைப் பொருட்களை பறிமுதல் செய்து, கடைக்கு சீல் வைத்து, உரிமத்தையும் ரத்து செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்