நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட ஆவின் மோர் அறிமுகம்

ஆவின் நிறுவனம் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆவின் மோர் உள்ளிட்ட 5 பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட ஆவின் மோர் அறிமுகம்
x
* கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட ஆவின் மோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

* இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு உள்ளிட்ட பொருட்களை கொண்டு இந்த மோர் தயாரிக்கப்பட்டுள்ளது. 

* உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்ட இந்த மோர், 200 மில்லி லிட்டர் பாட்டில் 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

* குழந்தைகள் மற்றும் இளைஞர்களை கவரும் தன்மை கொண்ட சாக்லேட் சுவை மிகுந்த சாக்கோ லெஸ்ஸி, மாம்பழ சுவை கொண்ட மேங்கோ லெஸ்ஸியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 

* இந்த 2 பொருட்களும் 200 மில்லி லிட்டர் கொண்ட பாட்டில் 23 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

* இதேபோல் நீண்ட நாட்கள் கெடாத தன்மை கொண்ட சமன்படுத்தப்பட்ட பாலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை குளிர்சாதன பெட்டியில் வைக்க தேவையில்லை அறை வெப்பநிலையில் 90 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். 

* 500 மில்லி லிட்டர் கொண்ட இந்த பாக்கெட் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

* உணவகங்கள், தேனீர் கடைகள், விடுதிகள் மற்றும் சமையல் கலை வல்லுநர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அதிக கொழுப்பு சத்து கொண்ட டீ மேட் (Tea Mate) என்ற புதிய வகை பால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

* ஒரு லிட்டர் பால் பாக்கெட்டின் விலை 60 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்