ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா - தொற்று பரப்பியதாக வெள்ளி வியாபாரி கைது

சேலம் மாநகரில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா - தொற்று பரப்பியதாக வெள்ளி வியாபாரி கைது
x
ஸ்ரீரங்கன் தெருவை சேர்ந்த வெள்ளி வியாபாரி ஒருவர் அண்மையில் மகாராஷ்டிராவிற்கு சென்று விட்டு உரிய அனுமதியின்றி சேலம் திரும்பி உள்ளார்.  இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் சுகாதார பணியாளர்கள் , அவரை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினர். முடிவில் அவர் உட்பட்ட அந்த தெருவில் வசிக்கும் 21 நபர்களுக்கு தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் மீது தொற்று தொற்று பரப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் மேலும் 99 பேருக்கு கொரோனா 

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று 99 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இதில் 10 வயதுக்கு உட்பட்டவர்கள் மொத்தம் 14 பேர் என கூறப்படுகிறது. மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 633 அக உயர்ந்து இருக்கிறது.


பெண் தலைமை காவலருக்கு கொரோனா - காவல் நிலையம் மூடல்

கோவை மாவட்டம் , போத்தனூர் காவல் நிலைய பெண் தலைமை காவலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 2வது முறையாக காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உடல் நலக்குறை ஏற்பட்ட அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் கொரோனா உறுதியானதால் , அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டு அருகே உள்ள திருமண மண்டபத்தில் அலுவலக பணிகள் நடைபெறுகிறது.

இன்று ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த பாதிப்பு எண்ணிக்கை - 1,252

விருதுநகர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 240 
பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது, மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 252 ஆக இருக்கிறது, இதுவரை 438 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் கூறுகையில்
மூன்று நாட்களுக்கு கொரோனா தொற்று அதிகமாகி பின்னர் குறையும் என்றார்.

சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று  - 2வது முறையாக காவல் நிலையம் மூடல்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் , சிறப்பு உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் , காவல் நிலையம் மூடப்பட்டது.
இதையடுத்து அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். கடந்த மாதம் 27ம் தேதி உதவி ஆய்வாளருக்கு தொற்று உறுதியானதால் இதே காவல் நிலையம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் 105 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று 105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 834 ஆக உள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை ஆயிரத்து 32 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 36 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்