குழந்தைகள் காப்பகத்தில் யாருக்கும் கொரோனா இல்லை - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

சென்னை ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகள் குணமாகிவிட்டனரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
x
சென்னை ராயபுரம் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகள் குணமாகிவிட்டனரா? என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சென்னை ராயபுரத்தில் பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட 35 குழந்தைகள் குணமாகிவிட்டனர் என்றும், குழந்தைகள் காப்பகத்தில் புதிதாக கொரோனா தொற்று இல்லை என்றும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், தமிழகத்தி ல் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் எந்தவொரு குழந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.  இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்துக்கு உதவ வழக்கறிஞர் கவுரவ் அகர்வாலை நியமித்த  நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளி வைத்துள்ளனர். பதில் மனு தாக்கல் செய்யாத உத்தரப் பிரதேசம், பஞ்சாப், திரிபுரா ஆகிய மாநிலங்கள் வெள்ளிக்கிழமை பதில் மனு தாக்கல் செய்யவும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்