கொரோனா பரவல் குறித்து ஆய்வு - நாளை சென்னை வருகிறது மத்திய குழு

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம், மத்திய குழு நாளை சென்னை வருகிறது.
x
கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் இருந்து விமானம் மூலம், மத்திய குழு நாளை சென்னை வருகிறது. தமிழகத்தில் தொற்று பரவலின் நிலவரம், கொரோனா உயிரிழப்பு, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்து இந்த குழு ஆய்வு செய்கிறது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், அந்த துறையின் உயர் அதிகாரிகளுடன், மத்திய குழு ஆலோசனை நடத்த உள்ளது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அகுஜா தலைமையில், 4 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்