சேலம் தனிமை முகாமில் பெண் தற்கொலை - ஊழியர்களின் அலட்சியப்போக்கே காரணம் என குற்றச்சாட்டு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சேலம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட பெண் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
சேலம் தனிமை முகாமில் பெண் தற்கொலை - ஊழியர்களின் அலட்சியப்போக்கே காரணம் என குற்றச்சாட்டு
x
ஒன்பதாம் பாலி கிராமத்தைச் சேர்ந்த 40- வயதான மாரியம்மாள் என்பவர், கடந்த 30 ஆம் தேதி கோரிமேடு அருகே உள்ள அரசு மகளிர் கல்லூரியில் உள்ள கொரோனா முகாமில் தனிமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த முகாமில் உள்ளவர்கள், மருத்துவர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தற்கொலை குறித்து, அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட முகாமில், பணியாற்றிய ஊழியர்களின் அலட்சியப்போக்கே இதற்கு காரணம் என்று, உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்