என்.எல்.சி நிர்வாகத்திற்கு ஸ்டாலின் கண்டனம் - இது போன்ற விபத்து ஏற்படாது என உறுதியளிக்க வேண்டுகோள்

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பாதுகாப்பு மிக மிக மோசமான நிலைமையில் இருப்பதை இந்த விபத்து உணர்த்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்.எல்.சி நிர்வாகத்திற்கு ஸ்டாலின் கண்டனம் - இது போன்ற விபத்து ஏற்படாது என உறுதியளிக்க வேண்டுகோள்
x
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் பாதுகாப்பு மிக மிக மோசமான நிலைமையில் இருப்பதை இந்த விபத்து உணர்த்துவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்கள் 7 பேரின் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உரியக் காலத்தில் பராமரிப்பு செய்யப்படாததும், புதுப்பிக்கப்படாததும்தான் இதற்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளார். என்.எல்.சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கால், ஆறு உயிர்களை இழந்துள்ளதாக கூறியுள்ள ஸ்டாலின், இனியொரு முறை இது போன்ற விபத்து ஏற்படாது என்று உறுதியளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்