சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து டி.ஜி.பி.சுற்றறிக்கை

பிணையில் செல்லக்கூடிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக பிணையில் அனுப்பி வைக்கவேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
சாத்தான்குளம் சம்பவத்தை அடுத்து டி.ஜி.பி.சுற்றறிக்கை
xcard1
சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட தந்தை, மகன்  உயிரிழந்த நிலையில், அனைத்து காவல் நிலையங்களுக்கும் டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். 
card 2
அதி​ல், கைதிகள் மூலம் கொரொனா பரவலை தடுக்கும் வகையிலும் அதன் மூலம் காவலர் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கவும் சில நடைமுறைகளை பின்பற்ற உத்தரவிட்டுள்ளார்.
card 3
கைது செய்யப்படும் நபர்களை சிறைக்கு அனுப்பும் வரை தனிமைப்படுத்தும் வகையில், காலியான கட்டிடங்களை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
card 4
அவ்வாறு காலியான கட்டிடங்கள் கிடைக்காத நிலையில்,உதவி ஆணையர், டி.எஸ்.பி. அலுவலகங்களை பயன்படுத்தவும் அறிவுறுத்தி உள்ள டி.ஜி.பி.,
card 5
அந்த நேரங்களில், உதவி ஆணையர், டி.எஸ்.பி.க்கள்  அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து தற்காலிகமாக பணியாற்றவும் உத்தரவிட்டுள்ளார். 
card 6
இவ்வாறு உருவாக்கப்படும் கட்டிடங்களில் தற்காலிகமாக கைதிகளை அடைத்து வைக்கவும், அப்போது  அங்கு ஆய்வாளர் ஒருவர் பணியில் இருக்கவும் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். 
card 7
பிணையில் செல்லக்கூடிய குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக பிணையில் அனுப்பி வைக்கவேண்டும் என்றும்,  அவர்களுடன் எந்தவித நேரடி தொடர்பும் காவலர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது எனவும் சுற்றறிக்கையில் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார். 
card 8
பிணையில் செல்ல முடியாத குற்றங்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய குறைந்த அளவிலான காவலர்களை பயன்படுத்த வேண்டும் என்றும், 
card 9
ஏற்கனவே நடைமுறையில் உள்ளதைப் போல, கைது செய்யப்பட்ட பின்னர் மருத்துவ பரிசோதனை  செய்வதோடு, கூடுதலாக கொரொனா பரிசோதனை செய்ய வேண்டும்  என டி.ஜி.பி. அறிவுறுத்தி உள்ளார்.
card10
ஒருவேளை கைது செய்யப்பட்ட நபருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டால், கைது செய்யும் பணியில் ஈடுபட்ட காவலர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். 
card11
குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றம் முன் ஆஜர்படுத்தவதற்கு பதிலாக காணொலி மூலமாக ஆஜர்படுத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
card12
காணொலி மூலம் கைதிகளை  நீதிபதி முன்பு ஆஜர்படுத்த தேவையான தொழில் நுட்ப ஏற்பாடுகளை அனைத்து காவல் நிலையங்களும் செய்து வைத்திருக்க வேண்டும் எனவும் டி.ஜி.பி. அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்