அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

லடாக் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் போர் பதற்றம் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார் .
அனைத்து கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை
x
பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவர் சோனியா காந்தி , தேசியவாத கட்சி தலைவர் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி , அதிமுக ஒருங்கிணைபாளரும், துணை முதல்வருமான ஒ.பன்னீர் செல்வம் , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அரசின் நடவடிக்கைக்கு துணை நிற்போம் என அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்